செப்டம்பர் 5-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தீபாவளி வெளியீடாக இருக்கும் என கருதப்பட்ட இப்படம், அதற்கு முன்னதாகவே வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘சிக்கந்தர்’ படம் வெளியாகிவிட்டதால், ஏ.ஆர்.முருகதாஸ் முழுமையாக ‘மதராஸி’ படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார். ‘சிக்கந்தர்’ படுதோல்வியால், ‘மதராஸி’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இன்னும் ஒரு சண்டைக்காட்சி மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.