சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அரசியல் கட்சிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேவைப்படுவோருக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘ஃபெஞ்சல்’ புயலையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு தங்களது கட்சியினர் மூலம் உதவிகளை செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளன.
திமுக: திமுக சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 80694 46900 என்ற செல்போன் எண்ணை பயன்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.