
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வாரமாக ரியாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, முதல் நிலை வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலெங்காவுடன் மோதினார்.

