சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதேபோல சென்னையில் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
The post தமிழகத்தில் பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.