
தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என்று துல்கர் சல்மான் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

