தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ‘தி இந்து’வில் அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்…
“மேற்கத்திய நாடுகளில் இருந்த சிம்பொனி இசையை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தவே 50 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய பாடல்களில் பயன்படுத்தினேன். தற்போது அதை எடுத்துக் கொண்டு வந்து நான் காப்பி அடித்துவிட்டேன் என்று கூறுகிறார்கள். நான் இதுபோன்ற இசை எல்லாம் உலகளவில் உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே என்னுடைய இசைகளில் பயன்படுத்தினேன். நான் கூறவில்லை என்றால், உங்களுக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்குமா?