கோவை: “விஜய் குழந்தைகளுக்கும், அவர் நடத்தி வரும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. வாட் ப்ரோ? முதலில் பேசுவதை நீங்கள் கடைபிடியுங்கள் ப்ரோ!” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று (பிப்.26) நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். எங்கள் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி. இப்பினும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு அநியாயம் நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது என கூறியிருக்கிறார்.