
கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சாம்ராட் ராணா 243.7 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவின் ஹூஹை 243.3 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

