
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் விளாசினார்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறியது. ஜோர்டான் ஹர்மான் 26, லெசெகோ செனோக்வானே 0, ஜுபைர் ஹம்சா 8, டெம்பா பவுமா 0, கானர் எஸ்டெர்ஹுய்சென் 0, டியான் வேன் வூரன் 6, கைல் சைமண்ட்ஸ் 5, பிரேனலன் சுப்ராயன் 20, ஒகுஹ்லே செலே 0 ரன்களில் நடையை கட்டினர்.

