ஒரு படத்தின் வெற்றியால் பல இயக்குநர்கள் ஐஸ்வர்யா ராஜேஷிடம் கதைகள் கூறி வருகிறார்கள். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் மேம்பட்டுள்ளது.
தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’. இதில் வெங்கடேஷுக்கு நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் உலகளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருவதாக வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இப்படத்தினை தில் ராஜு தயாரித்திருந்தார்.