திருநெல்வேலி: "நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாம் தமிழர் கட்சிதான் ஸ்லீப் ஆகிவிட்டது” என கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்வின் மற்றும் சீமானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பார்வின் வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளைஞர் அணி செயலாளர் உட்பட 50 நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தனர்.