அமரன்… நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய திரைப்படம். இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில சர்ச்சைகளும் ஏற்பட்டன. மேஜர் முகுந்த் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் எந்த ஒரு காட்சியிலும் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் திரைப்படத்தில் முகுந்த் மனைவியாக நடித்தவர் கிறிஸ்தவ பெண் என்ற தகவல் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தது. நடுநிலையான விமர்சகர்கள், பொதுமக்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால், ஜாதி, மதம் சார்ந்த அடையாளங்களை விடவும் நாடு முக்கியம். நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகனுடைய வாழ்க்கை கதை வெளியானதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் கிடைத்தால், அதுவே போதும் என்று எண்ணியோ என்னவோ… முகுந்த் வரதராஜனின் பெற்றோர் சாதி சர்ச்சை குறித்து எதுவும் பேசாமல் பரந்த மனதுடன் கடந்து சென்றனர்.