சென்னை: சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீரழிவில், போதைப் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டை ஆக்கப்பூர்வமான பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையில் திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.