
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களே 'எக்ஸ் காரணி'யாக உருவெடுத்துள்ளனர் என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தல்களின் எக்ஸ் காரணி பெண்கள் அல்ல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் நிதிஷ் – லாலுவை நம்பவில்லை. இப்போது மக்கள் சிந்திக்கிறார்கள். இம்முறை மாற்றி வாக்களித்து பார்ப்போம், ஒருவேளை நம் வாழ்க்கை மேம்படும் என நம்புகிறார்கள். இந்த இரண்டு காரணிகளும் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தன.

