மகாராஷ்டிரா ஆளுநருக்கு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் – இனி என்ன நடக்கும்?

கவுஹாத்தி: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு! டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு!

ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பாஜகவின் சதி

சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேரம்

இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்து இருக்கிறது. நேற்று பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு உள்ளதாகவும் அவர்களில் 5 பேர் அமைச்சர்கள் என்றும் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ என்றும் தகவல் வெளியானது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.