புதுடெல்லி: மணிப்பூரில் தற்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் நிகழும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தலையிடக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த செவ்வாய் கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், கார்கேவுக்கு 3 பக்க கடிதத்தை நட்டா எழுதியுள்ளார். அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது உள்ளூர் பிரச்சினைகளைக் கையாள்வதில் காங்கிரஸ் சந்தித்த மோசமான தோல்வியின் பாதிப்புகளில் இருந்து மணிப்பூர் இன்னமும் விடுபடவில்லை.