சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுருக்கும் அறிக்கையில், “சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுவதை தடுப்பதிலும், இயற்கையை காப்பதிலும், விவசாயத்தை மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுப்பதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முனைப்புக் காட்டி வந்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக, சேது சமுத்திரத் திட்டம் மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.