பிரபல இந்தி நடிகர் கோவிந்தா. இவர் 1987-ம் ஆண்டு சுனிதா என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு டினா அஹுஜா என்ற மகள், யஷ்வர்தன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி, சுனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி கோவிந்தாவின் மானேஜர் சசி சின்ஹா கூறும்போது, “அவர் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார் என்பது தெரியும். அது, எது தொடர்பானது என்பது தெரிய வில்லை. வக்கீல் நோட்டீஸ் எதுவும் எங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்களின் வழக்கறிஞர் லலித், 6 மாதங்களுக்கு முன்பே இவர்கள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.