மதுவுக்கு எதிராக 'சரக்கு' என்ற படத்தை எடுத்த மன்சூர் அலிகான், அடுத்து நடித்து இசை அமைக்கும் படத்துக்கு ‘யார் அந்த சார்?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சலாம் சினிமாஸ் சார்பில் சபூர் தயாரிக்கிறார். “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது, வேலியே பயிரை மேய்வது என்பது தான் கதைக் கரு. எதிர்பாராத திருப்பங்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகிறது” என்றது படக்குழு.