மலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை, இந்திய பெருங்கடலில் தேடும் பணி, 90 சதவீதம் முடிந்து விட்டதால், இது தொடர்பான அறிக்கையை, மலேசிய அரசு, அடுத்த வாரம் ?வளியிட முடிவு செய்து உள்ளது.

239 பேர் : மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, சென்ற மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானது. இந்தியர்கள், ஐந்து பேர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில்
பயணித்தனர். இந்த, விமானம், இந்திய பெருங்கடலில், மூழ்கியிருக்கலாம், என்ற நம்பிக்கையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை, மலேசிய விமானத்தின் எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை.
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் மூலமும், கருப்பு பெட்டியை அறிய கூடிய “ப்ளுபின்-21′ சாதனம் மூலமும், விமானம் தேடப்பட்டு வருகிறது. இந்திய பெருங்கடலில், விமானத்தை தேடும் பணி, 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கடற்படை தளபதி தலைமையிலான, கூட்டு முயற்சி குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

முடிவு : இந்த குழுவினர் எந்த விதமான தகவலை அளித்தாலும், அதை ஏற்பது என, மலேசிய அமைச்சரவை, இரண்டு நாட்களுக்கு முன் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, விமான பயணிகளின் உறவினர்கள், விமானம் குறித்த தகவலை கேட்பதால், அடுத்த வாரம், இது தொடர்பான அறிக்கையை, மலேசிய அரசு ?வளியிட உள்ளதாக, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தில், 150க்கும் அதிகமான சீன பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விமானம் குறித்த, உரிய தகவலை தெரிவிக்கும்படி கோரி, சீன தலைநகர், பீஜிங்கில், நேற்று முன்தினம் இரவு முதல் ஏராளமான உறவினர்கள், மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதனால், இந்திய, அமெரிக்க, மலேசிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை, சீன பாதுகாப்பு படையினர் மூடியுள்ளனர். இந்த பகுதியில் நேற்று,
போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP