
கவின், ருஹானி சர்மா,ஆண்ட்ரியா, சார்லி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘மாஸ்க்’. டார்க் காமெடி த்ரில்லர் படமான இதை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்‌ஷன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவ. 21-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, நெல்சன் என பலர் கலந்துகொண்டனர்.

