சென்னை: இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்போர் திருமண பதிவு தொடர்பாக சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. திருணமங்கள் பதிவு செய்ய சம்பந்தபட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை 26ம் தேதி செயல்பாட்டில் வைக்க வேண்டும். நிலுவையில் உள்ள 898 இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வுதுறை சார்பில் பதிவுத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக அனைத்து சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post முகாம் வாழ் இலங்கை தமிழர் திருமண பதிவு: சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.