மு.க.ஸ்டாலின்: எனக்கு உறுதுணையாக உள்ளார் ஆளுநர்

சென்னை: தமி­ழ­கத்­தில் தமது ஆட்­சிக் காலம் உயர் ­கல்­வி­யின் பொற்­கா­ல­மாக மாற வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­க­வும் இதற்கு உறு­து­ணை­யாக உள்ள தமி­ழக ஆளு­ந­ருக்கு நன்றி தெரி­விப்­ப­தாகவும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

நேற்று சென்னை பல்­க­லைக்­கழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர், மாண­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு தொடர்­பான பல வழி­காட்­டு­தல்­களை வழங்­கவே ‘நான் முதல்­வன்’ திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது என்றார்.

தமி­ழக ஆளு­ந­ருக்­கும் முதல்­வருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நிலவி வரு­வ­தாக ஊட­கங்­களில் அவ்­வப்­போது செய்தி வெளி­யாகி வரு­கிறது. இந்­நி­லை­யில், நேற்­றைய நிகழ்­வில் இரு­வரும் பங்­கேற்று ஒரே மேடை­யில் அமர்ந்­தி­ருந்­த­னர்.

அப்­போது பேசிய முதல்­வர் ஸ்டா­லின், தமி­ழகத்தில் வேலை கிடைக்­க­வில்லை என்று எந்த இளை­ஞ­ரும் கூறக்­கூ­டாது என்றும் வேலைக்கு ஆள் கிடைக்­க­வில்லை என்று எந்த நிறு­வ­ன­மும் கூறக்­கூ­டாது என்­றும் கூறி­னார்.

அத்­த­கைய நிலையை எட்­டு­வதற்­கான திட்­டங்­களை தமி­ழக அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது என்­றார் அவர். அனைத்து பல்­கலைக்­க­ழகங்­களும் இது போன்ற திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்டார்.

“காம­ரா­ஜர் ஆட்­சிக் காலம் பள்­ளிக் கல்­வித் துறை­யின் பொற்­கா­லம், கலை­ஞர் ஆட்­சிக் காலம் கல்­லூ­ரி­க­ளின் பொற்­கா­லம் என்­பதைப் போல, எனது தலை­மை­யி­லான ஆட்­சிக் காலம் உயர்­கல்­வித் துறை­யின் பொற்­கா­ல­மாக மாற வேண்­டும் என திட்­ட­மிட்டுச் செயல்­பட்­டுக்கொண்­டி­ருக்­கிறோம்.

“நிதி பற்­றாக்­குறை இருந்த போதும் மாண­வர்­க­ளின் நலன் கருதி பல திட்­டங்­களை தமி­ழக அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது. இது மாண­வர்­க­ளுக்­கான அரசு.

“சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் திரு­நங்­கை­க­ளுக்கு இல­வச கல்வி வழங்­கப்­படும் என்ற திட்­டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்­கிறது. குழந்­தை­க­ளுக்கு பெற்­றோர்­கள் அளிக்­கும் சிறந்த சொத்து கல்­வி­தான்,” என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *