சென்னை: மெட்ராஸ் என்ற தலைநகரின் பெயரை சென்னை என மாற்றம் செய்து கலைஞர் அறிவித்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக பொருளாதார அடிப்படையில் செல்வாக்கான நகரமாக வளர்ந்தது மதராஸ். சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மதராஸ் என்பதை “மெட்ராஸ்” என்று பிற மொழிகளில் எழுதினார்கள்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டது. எனினும், மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது. எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் குறிப்பிட வேண்டும் தமிழக அரசு முடிவு செய்தது. 1996 ஜூலை 17 ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் இனி சென்னை என்றே அழைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். ‘மெட்ராஸ்’ அதிகாரப்பூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* தமிழ்மொழி மற்றும் தமிழர்களுக்கான அடையாளங்களை உறுதி செய்ததில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.
* இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்களில் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தமிழ்மொழியைப் பரவச்செய்தது தி.மு.க. நமஸ்காரத்தை ‘வணக்கம்’ ஆக்கியதும், அக்கிராசனாரை ‘தலைவர் ’ஆக்கியதும் அபேட்சகரை ‘வேட்பாளர்’ ஆக்கியதும் தி.மு.கதான்.
* குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதை இயக்கமாக முன்னெடுத்ததும் தி.மு.க.தான்.
*அந்த வரிசையில் தாய்த்தமிழ் நிலத்துக்கு ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி சூட்டியவர் பேரறிஞர் அண்ணா.
* அவரின் வழியில் ஆட்சி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் 17.07.1996 அன்று ‘மெட்ராஸ்’ என்ற பெயரை மாற்றி ‘சென்னை’ என்ற பெயரைக் கொண்டுவந்தார்.
The post மெட்ராஸ் என்ற தலைநகரின் பெயரை சென்னை என மாற்றம் செய்து கலைஞர் அறிவித்த நாள் இன்று..!! appeared first on Dinakaran.