in ,

மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

Tamil_News_large_934459

பெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார்.

 

அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் காங்கிரசுக்கு அம்பானி ஹெலிகாப்டர் வழங்கியிருக்கிறார் . இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால் முகேஷ் அம்பானியின் கையில் சிக்கி விடுவர்.டில்லியில் நாங்கள் 49 நாட்கள் ஆட்சி செய்தாலும் , மக்கள் எங்களை பாராட்டுகின்றனர். அவர்கள் மீண்டும் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். டில்லியில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ், பா.ஜ., ஆகிய அரசியல் கட்சிகளின் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரியானா, உ .பி., மக்கள் கவலையில் உள்ளனர்.

 

எடியூரப்பா தொலை தொடர்பு துறை அமைச்சர்: ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக கர்நாடக மக்கள் கவலையுற்றுள்ளனர். இங்கு காங்., பாஜ., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காரணம் இங்குள்ள எடியூரப்பா செய்த ஊழல். ஆனால் இவருக்கு மோடி, தேர்தலில் நிற்க எப்படி சீட் கொடுத்தார். மோடி பிரதமரானால் எடியூரப்பா தொலை தொடர்பு துறை அமைச்சராவார். அமித்ஷா உள்துறை அமைச்ராவார். இங்குள்ள பா.ஜ., வை சேர்ந்த ஸ்ரீராமுலு ஊழலில் சிக்கியவர். இவருக்கும் சீட் கொடுக்க பா.ஜ.,வில் நிர்பந்தம் நடக்கிறது. இது ஏன் என எனக்கு புரியவில்லை. பா.ஜ,. மற்றும் காங்கிரஸ் ஊழலை ஒழிப்போம் என்றனர். ஆனால் அவர்களால் இது முடியவில்லை. இரண்டு கட்சியிலும் உள்ள ஊழல்வாதிகள் பட்டியல் வைத்துள்ளேன்.

 

குஜராத் அமைச்சரவையில் ஊழல் : முக்கிய கட்சிகளை மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர். மாற்று சக்தி வேண்டும் என கருதுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பெரும் ஊழல் புரிந்த காங்கிரசை மக்கள் ஒதுக்கிட முடிவு செய்து விட்டனர். குஜராத்தில் வளர்ச்சி அடைந்ததாக கூறுவது பொய். இதன் வளர்ச்சி குறித்த அறிக்கையை நான் கேட்கிறேன். குஜராத்தில் 26 மாவட்டங்களில் சர்வே செய்தேன். அங்கு அனைத்து பணிகளும் லஞ்சம் கொடுத்தால் தான் நடக்கிறது. குஜராத்தில் ஒரு உயர் அதிகாரி பணம் கொடுத்துதான் பதவி பெற்றுள்ளார். குஜராத் அமைச்சரவையில் ஊழல் கறை படிந்த அமைச்சர்கள் உள்ளனர். குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற காலம் முதல் 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. மீடியாக்கள் ஏன் குஜராத் வளர்ச்சி குறித்து தவறான தகவலை தருகிறது ? 60 ஆயிரம் சிறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. நான் ஒரு முன்னாள் முதல்வர் , குஜராத் முதல்வரை சந்திக்க சென்றேன். ஆனால் எனக்கு அனுமதி தரப்படவில்லை. என்னை தடுத்து நிறுத்த மோடி ஆயிரம் போலீசாரை அனுப்பினார். மோடி என்னை கண்டு ஓடி ஒளிவது ஏன்? பேசின் காஸ் நிறுவனம் நடத்தும் அம்பானிக்கு காங்கிரஸ் 400 சதவீத லாபத்தை அளிக்கிறது. வீரப்ப மொய்லி அம்பானிக்கு ஆதரவாக விலையை உயர்த்துகிறார்.

 

ராகுலை எதிர்த்து வேட்பாளராக நாங்கள் நிறுத்தியுள்ள குமார் விஸ்வாசை தினமும் தாக்கி வருகின்றனர். எனது கட்சி சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிட கேட்டுள்ளது. வரும் 23 ம்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளேன். அங்குள்ள மக்களிடம் கேட்பேன். அவர்கள் விரும்பினால் நான் போட்டியிடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்

ஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்

30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்