
விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களும், ஆந்திரா 177 ரன்களும் எடுத்தன. 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.

