நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுஷலுடன் அவர் நடித்து பிப்.14-ல் வெளியான ‘ஜாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நேரமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு ராஷ்மிகா சார்ந்துள்ள கொடவா சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.