சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ரூ.4.25 கோடியில் 17 மதரகப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட இருப்பதாக வனத் துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமை மரப்பூங்காக்கள்) உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைக்கவும், இத்திட்ட செயலாக்கத்தில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கான மாற்று வருவாய் வாய்ப்பு ஏற்படுத்தவும், மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.