வரலாற்று சரிவை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. இதனால் டாலர் வலுப்பெற்று வருகிறது.மேலும், அமெரிக்க வட்டிவிகிதம் அதிகரிக்கும் என்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இம்மாதத்தில் இதுவரை, கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய முதலீடுகள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, ரூபாய் வலுவிழந்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும், ரூபாய் லாபமடைவதை பாதித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 78.45 ரூபாய் எனும் அளவுக்கு சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.