in ,

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

வாரணாசி,

Arvind Kejriwalகுஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.  ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என தெரிகிறது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நான் களம் இறங்க வேண்டும் என்று எனது கட்சி விரும்புகிறது. மோடியை தோற்கடிக்க வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன். வாரணாசி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அப்போது பொதுமக்களிடம் நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? என்று கருத்து கேட்பேன். அவர்கள் என்ன தெரிவிக்கிறார்களோ அதன் அடிப்படையில் முடிவு எடுப்பேன். ஒருவேளை நான் போட்டியிட வேண்டும் என்று வாரணாசி மக்கள் விரும்பினால், அதை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்வேன் என்று ஏற்கனவே கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து கெஜ்ரிவால் இன்று வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கிறார். பின்னர் மோடிக்கு ஏதிராக போட்டியிடுவது தொடர்பாக முடிவு அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. பெனாரஸ் இந்து பல்கலைக்கழக டாகடர்களை முதலில் கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார். பின்னர் பிரசாரம் மேற்கொள்கிறார். “இது நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை தோற்கடிக்க வேண்டிய நேரம். இதனை செய்ய எங்களால் முடிந்தால் அது நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்ற” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தினத்தந்தி

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்