ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி அடைந்திருந்தன. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.