
புதுடெல்லி: 31-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 23 முதல் 30 வரை மலேசியாவின் இபோ நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீரரான மன்பிரீத் சிங், ஸ்டிரைக்கர் மன்தீப் சிங், கோல் கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்கீரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிபன்டரான சஞ்சய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீரரான செல்வம் கார்த்திக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 23-ல் கொரியாவுடன் மோதுகிறது.

