சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மொழி குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.