சென்னை :“எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” என இபிஎஸ் பேசியதற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுக பொதுச்செய்லாளர் எடப்பாடி பழனிசாமி நகைச்சுவையாக பேசி வருகிறார். கடந்த வாரம் கம்யூனிஸ்டுகளை விமர்சித்த எடப்பாடி, இந்த வாரம் கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை. 2025ம் ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தான். இபிஎஸ் ஏற்கனவே சேர்ந்திருக்கும் பாஜக, ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம். அதன் ஆபத்தை உணர்ந்தும் தனக்கு இருக்கும் நெருக்கடியால் அதில் பயணிக்கிறார்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதியை பாஜக இழைத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை பாஜக அமல்படுத்தியதில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன?.3ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு நடத்தும் தேசிய கல்விக் கொள்கையை எடப்பாடி ஆதரிக்கிறாரா?. ஒன்றிய அரசின் கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்.. மோடி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு குறைக்கப்படுகிறது. பாஜக அரசின் உதய் மின் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குபின் எடப்பாடி ஆட்சியில் உதய்மின் திட்டத்தை அனுமதித்தனர்.உதய் மின் திட்டத்தை ஏற்று கொண்டதால் தான் தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படை தாக்குதலால் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழ்நாடு மீனவர்களின் பாதிப்பு குறித்து தனது நிலைப்பாட்டை எடப்பாடி சொல்ல வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் அழித்துவிடும் என கூட்டணியில் இருந்து விலகினார் ஜெயலலிதா.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி 13 மாதத்தில் ஆட்சியை கவிழ்த்தார். ஜெயலலிதா. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்த எடப்பாடி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் பாஜக பங்கு பெறுவோம் என அமித் ஷா கூறுகிறார். ,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இபிஎஸ் சேர்ந்திருக்கும் பாஜக, ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம் : சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பதிலடி appeared first on Dinakaran.