
சென்னை: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ராதிகா சுதந்திரா சீலன், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் நியூஸிலாந்தின் எம்மா மெர்சனுடன் மோதினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராதிகா சுதந்திரா சீலன் 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

