
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, எஸ்ஐஆர்
பணிகளைமுடக்க திமுக அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக திமுக தொண்டர்களும், திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்களும் நியமிக்கப்படுவதால் இந்த பணிநேர்மையாக நடக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
போலி வாக்காளர்களைக்காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது.இதனால் தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள், வாக்குச்சாவடி அலுவலர்களை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். எனவே, திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.அரசு அதிகாரிகளையும், நடுநிலையானவர்களையும் பணியில் அமர்த்த வேண்டும்.

