துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்துவீச்சு தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 10 இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் 892 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சக வீரர் ஸ்டீவ் ஸ்மித் 845 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் பும்ரா 830 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் 901 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி 811 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்கிறார்.

ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் 679 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 733 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷகீப் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *