
சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

