சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு என பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது எனவும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு appeared first on Dinakaran.