கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்து அதன் பின்னால் வந்த சரக்கு வாகனம், அதன் பின்னால் அடுத்தடுத்து 2 கார்கள் ஒரு லாரி உள்ளிட்ட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் வந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். வாகனங்கள் மொத்திய விபத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.