தென்காசி: கடையநல்லூர் ஒன்றியம் கம்பனேரி ஊராட்சி பால அருணாசலபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் கொடிய விஷ பாம்பு புகுந்ததால் பராமரிப்பின்றி கிடக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து அங்கன்வாடி மையத்திற்கு தேவையான கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென குழந்தைகளின் தாய்மார்கள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கமல் கிஷோர் உறுதி அளித்துள்ளார்.
The post கடையநல்லூர் அருகே பாலஅருணாசலபுரத்தில் பராமரிப்பில்லாத அங்கன்வாடி மையத்தில் `பாம்பு’: தாய்மார்கள் கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.