ஊட்டி: கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு மற்றும் 8வது மையில் டீ பார்க் ஆகிய 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம், கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது. நீலகிரியில் உள்ள மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது
நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது. நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் ஆரஞ்சு அலார்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக உதகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உதகையில் உள்ள சூழல் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன
The post கனமழை எச்சரிக்கை: உதகையில் 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று முடல் appeared first on Dinakaran.