சென்னை: சென்னை மாவட்ட வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை உரைநூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இதில் முனைவர்கள் இறையன்பு, பர்வீன் சுல்தானா வாழ்த்துரை வழங்குகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை குறித்து உரைநூலை வெளியிடுகிறார்.
இந்நூலின் முதல் பிரதியை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்று கொள்கிறார். பின்னர் இந்நூலின் சிறப்புகள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகிறார். இதில் வெற்றி தமிழர் பேரவையின் சென்னை மாநகர செயலாளர் வி.பி.குமார், தனியார் கால்டாக்சி நிறுவன இணை இயக்குநர் ம.தமிழரசு, மெகா டிஜிட்டல் நிறுவனர் எம்.எஸ்.பஷீர் அஹமது, ஒய்.காதர்மைதீன், ரா.சண்முகம், சாஜ் அண்ட் தாஜ் ஆர்.எஸ்.நாசர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
The post காமராசர் அரங்கில் நாளை மாலை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் appeared first on Dinakaran.