நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதியது. மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதி. சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தையால் விபத்து! appeared first on Dinakaran.