பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை ஷிவமொக்காவிலிருந்து பெங்களூருக்கு 300 கிமீ பயணத்தைத் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தொடங்குவதற்கு முன்னதாகவே, ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவரை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு முன்பு, முதல்வர் இரண்டு முறை காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
உடுப்பியில் லாட்ஜ் ஒன்றில் 40 வயது சிவில் ஒப்பந்ததாரர் இறந்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது. ஏனென்றால், தற்கொலை செய்த நபர், என் மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என்றும், வாட்ஸ்அப் வாயிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவரை பதவி விலகும் படி எதிர்கட்சிகள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.
73 வயதான பாஜக மூத்த தலைவரான கே.எஸ். ஈஸ்வரப்பா புதன்கிழமை பேசுகையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ராஜினாமா செய்யத் தயாராக இருந்தேன், ஆனால் முதல்வர் பொம்மை என்னை காத்திருக்கச் சொன்னார். ஒரு நாள் கழித்து, எனது ராஜினாமாவை அறிவிக்கத் தயாராக இருந்தேன், ஆனால் மீண்டும் காத்திருக்கும்படி கூறினார்.நான் நிச்சயம் ராஜினாமா செய்யப் போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரப்பாவை ராஜினாமா செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் அவர் ஓபிசி பிரிவு தலைவராக இருப்பதால், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பாஜகவில் ஒரு பிரிவினர் அவரை பாதுகாத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அவரது ராஜினாமா குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அக்கட்சி நிர்வாகி, கட்சியில் வெவ்வேறு பதவிகளில் இருக்கும் ஈஸ்வரப்பாவின் பாதுகாவலர்கள், அவர் கர்நாடகாவில் ஓபிசி சமூகத்தின் மிக உயரமான தலைவர் , அவர் வெளியேற்றப்பட்டால், வாக்கு வங்கி இழக்கப்படும் என அறிவுறுத்தினர். அவர்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தினர். ஓபிசி வாக்கு வங்கிக்கு பின்னால் ஈஸ்வரப்பாவை மறைப்பது வீண் செயல். கட்சியின் ஆதரவு இழக்க நேரிடும் என கட்சி தலைமையை நம்ப வைக்க முயன்றனர் என தெரிவித்தார்.
காவி கட்சியில் உள்ள பிரிவுவாதம் குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கு முந்தையது. பிஎஸ் எடியூரப்பா, பிராமணத் தலைவர் எச்என் அனந்த்குமார் இருவருக்கும், மத்திய அரசுடன் வலுவான தொடர்பு இருந்ததால் போட்டி வளர்ந்தது.
2008 இல் தென்னிந்தியாவில் முதல்முறையாக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமிடுவதற்காக, இருவரும் தங்கள் பகை, போட்டியை தள்ளிவைத்தனர். ஆனால், அவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு ஆட்சி நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியது.2008 மற்றும் 2013 க்கு இடையில் எடியூரப்பா நிர்வாகம் ஊழல் உட்பட பல குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டது.
மேலாதிக்கத்திற்கான உட்கட்சி மோதல், 2011 இல் ஊழல் குற்றத்திற்காக எடியூரப்பாவைக் கைது செய்ய வழிவகுத்தது. இதன் காரணமாக, பாஜக அடுத்த ஆண்டே கர்நாடகா கோட்டையை இழந்து வெளியேறியது. முன்னாள் முதல்வர் கர்நாடக ஜனதா கட்சியை (கேஜேபி) உருவாக்கினார்.
நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு, 2018 இல் அனந்த்குமார் இறந்தததால், எடியூரப்பா சிறிது காலத்திற்கு கர்நாடக பாஜகவில் தனது இருப்பை நிலைநிறுத்த முடிந்தது. ஆனால் 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய தலைமையின் ஆதரவை இழந்தார்.
2019 முதல் 2021 வரை எடியூரப்பா முதலமைச்சராக இருந்தார். மார்ச் 2021 இல் அவரது அரசாங்கத்தில் இருந்து ஒரு அமைச்சர் வெளியேறியது, கர்நாடகா பாஜக பிரிவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், வருங்கால முதலமைச்சரைத் தீர்மானிக்கக்கூடிய “கிங்மேக்கர் என அமைச்சர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது நாட்களில், முதல்வர் பதவி எடியூர்ப்பாவிடமிருந்து பொம்பை கைக்கு சென்றது.
எடியூரப்பாவை எதிர்த்துப் போராடக்கூடியவராக ஈஸ்வரப்பா முன்னிறுத்தப்பட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தன. 2021 ஆம் ஆண்டில், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் சாலை-ஒப்பந்த திட்டங்களை வழங்குவதில் தவறான நிர்வாகம் இருப்பதாக குற்றம் சாட்டுவதற்காக ஈஸ்வரப்பா மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அப்போது எடியூரப்பா முதல்வராக இருந்தார்.
ஈஸ்வரப்பாவின் ராஜினாமாவை எதிர்க்கும் சிலர், அடுத்தாண்டு மாநிலத் தேர்தலில் இத்தகைய நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் ஷா ஆகியோரை நம்ப வைக்க முயன்றதாக கர்நாடகத்தைச் சேர்ந்த இரண்டு பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், கர்நாடகாவின் மத்தியப் பொறுப்பாளரான கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங், பல தலைவர்களுடன் பேசியதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நட்டா கர்நாடகா செல்லும் போது ஊடகவியலாளர்களின் சிக்கலான கேள்விகளை எதிர்கொள்ள விரும்பவில்லை என்பதை பாஜக தலைமை தெளிவுபடுத்தியதாக சொல்லப்படுகிறது. அமைச்சர் ராஜினாமா செய்வதை அறிவித்ததால், அவரை சமாதானம் படுத்த கட்சி மேலிடம் முயற்சிக்கவில்லை என மாநில தலைவர் தெரிவித்தார்.
கர்நாடகா பாஜக பிரிவு குறித்து நன்கு அறிந்த மூத்த தலைவர் கூறுகையில், “அவர் ராஜினாமா செய்தால் கட்சிக்கு நல்லது என்று மத்திய தலைமையும், முதலமைச்சரும் கூறியதைத் தொடர்ந்து, தான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவருக்கு, ஓபிசி தலைவர் அந்தஸ்தில் நாம் இருக்கும் போது, தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், கட்சித் தலைமைக்கு அவரைக் கைவிடுவது கடினமாகிவிடும் என்ற எண்ணம் இருந்துள்ளது. ஆனால், தற்போதைய பாஜக தலைமை, இதுபோன்ற ஒழுக்கமின்மை மற்றும் மிரட்டல் தந்திரங்களை பாராட்டுவதில்லை” என தெரிவித்தார்.