கோவை: கோவையில் உறவினர்களுடன் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடச் சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ல் கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூங்காவில், சிறுமிக்கு 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மண்கன்டன் (30), பப்ஸ் கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இச்சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.