கோவை: உக்கடத்தில் 2 இடங்களில் பேருந்து நிலையம் கட்ட ரூ.21.55 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட வெளியூர்களுக்கும், மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் நிலவும் போக்குவ ரத்து நெரிசலை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மேம்பாலம் கட்டப் பட்டது. இந்த மேம்பாலத்தின் ஒருபகுதி உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கிறது. இதற்காக பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து நிலையத்தின் இடம் சுருங்கி, சீரற்ற நிலை காணப்படுகிறது.