சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது ஐதராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்கள் மீது பொது சூதாட்ட சட்டம் 1867ன் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
குறிப்பாக விசாகப்பட்டினம், சூர்யாபேட், சைபராபாத், மியாபூர், பஞ்சகுட்டா ஆகிய காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள். இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 29 பேர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.