சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் காவல்துறை சித்ரவதையால் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பன் உறவினர் அர்ஜுனனின் மகன் சதீஷ்குமார், ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். உரிய ஆதாரங்களை சேகரித்து உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் காவல்துறை சித்ரவதையால் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.