ஹைதராபாத் : பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் தோல்வியை சந்தித்தது.
பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
இதனால் கட்சியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சியை மறுசீரமைப்புக்கு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று நிலையில் கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.நேற்று குஜராத்தில் பெரும்பான்மை பெற்ற பரிதார் சமூகத் தலைவரான நரேஷ் பட்டேலை டெல்லியில் சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளாத சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவர் மற்ற கட்சிகளில் இருந்து முழுமையாக விலகி காங்கிரஸில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் முக்கியத்துவம்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. கட்சியின் தற்போதைய தலைவரான சோனியா காந்தியை அவர் சந்தித்து பேசியது தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்பட்டது.
2024 நாடாளுமன்ற தேர்தல்
தொடர்ந்து 2 முறை காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி இரண்டு முறை சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், வரும் நாட்களில் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், தேர்தல் குறித்து வரைவு திட்டத்தை முன் வைத்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆறு ஆகிய சோனியா காந்தி முகுல் வாஸ்னிக், பிரியங்கா காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.
கேசிஆர் உடன் சந்திப்பு
நேற்று குஜராத்தில் பெரும்பான்மை பெற்ற பரிதார் சமூகத் தலைவரான நரேஷ் பட்டேலை டெல்லியில் சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளாத சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவர் மற்ற கட்சிகளில் இருந்து முழுமையாக விலகி காங்கிரஸில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
ஒப்பந்தம் கையெழுத்து
பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்க பிரசாந்த் கிஷோர் முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அரசோடு மோதல் போக்கை கையாண்டு வரும் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். நேற்று காலை முதல் அவரது இல்லத்தில் முகாமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நேற்று இரவு அங்கேயே தங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு தெலுங்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனக்கு உதவுவார் என சந்திரசேகரராவ் கூறிய நிலையில், முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.